Categories
தேசிய செய்திகள்

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்… அரசு முடிவெடுக்குமா?…!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 28வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதிக்கவும், முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பு குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும். மேலும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு இன்று ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |