தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், தேமுதி க தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும், வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செய்யலாம் எனவும், ரூ.4000 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும், ரூ.2000 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும் செலுத்தி மனு பெறலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.