Categories
மாநில செய்திகள்

இன்று (மார்ச்.7) 2 மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச்.7) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |