Categories
தேசிய செய்திகள்

இன்று (மார்ச்16) ஆம் தேதி முதல்…. அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவிலுள்ள ஏராளமான தென்மாநிலங்களில் வழக்கம்போல் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தான் கோடை வெப்பம் ஆரம்பமாகும். இதன் காரணமாக அந்த நாட்களில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி விடுமுறைகள் அறிவிப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் சமீபம் காலங்களாக மே மாதத்திற்கு முன்பாகவே கோடை வெயில் தொடங்கி விடுவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தை சந்திக்க முடியாமல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களில் பகல்நேர வெப்பம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளின் இயக்க நேரத்தை குறைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

அந்த அடிப்படையில் மார்ச் 16 (இன்று) முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7:45 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு மே 20 அன்று கடைசி வேலை நாள் வரை இந்த திருத்தப்பட்ட நேரங்கள் இயங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சிறிய இடைவேளைக்குப் பின் ஜூன் 12ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதற்கு முன்பே ஹைதராபாத் நகர மக்கள் மார்ச் மாதத்தில் இருந்து அதிக வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் சென்ற மாதம் 35 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்பநிலையானது கடந்த சில தினங்களில் 40 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. அதேபோன்று வரவுள்ள மாதங்களில் அதிகபட்சம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து மே மாதம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயரும்போது வெப்பம் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |