ராஜஸ்தானில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்படவுள்ளது
நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.
வாரத்தின் இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட உள்ள இந்த முழு ஊரடங்கின் போது அவசியம் இல்லாமல் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று மட்டுமே ராஜஸ்தானில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.