வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா இன்று மாலை வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம்.
இந்நிலையில் இன்று மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.