கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கால தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஊரடங்கு முடியும் ? எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமாக முடிவாகாத சூழலில் கல்லூரி தொடங்குவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 536 பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.