தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வராக இன்று காலை ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அதன் பிறகு ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்டாலின், அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.