மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை இப்படி ஏராளமான விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பம்சம் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றியிருக்கிறார்.