தமிழகத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று மாலை 5 மணிக்கே பூண்டி ஏரி திறக்கப்படுகிறது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், உபரி நீர் கலிங்கல் மூலம் கிளி ஆற்றில் வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.