சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா 40 என்ற படத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு வாடிவாசல் திரைப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்று சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.