கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கான தடையை அமல்படுத்தவுள்ளது.