Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 6 மணிவரை செயல்படாது… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று 6 மணி வரை மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு தவிர மற்றவை இயங்காது என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் மருத்துவமனைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அவசர கால சேவைகள், கோவிட் சேவைகள் அல்லாத மற்ற அனைத்து சேவைகளும் இன்று மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டிருக்கும். ஐசியுக்கள், சிசியுக்கள் மற்றும் அவசர வார்டுகள் செயல்பாட்டில் இருக்கும். ஆனால் அவசரமற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |