கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறியுள்ளார். திருவள்ளுவர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்பட இருக்கின்றது. அப்போது திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஐ ஆர் என் பின்புறம் ராஜாஜி புறம் ஸ்ரீ நிகேதன் பள்ளி, எஸ்வி கோவில் தெரு, காந்திபுரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல திருத்தணி கூட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் திருத்தணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சரஸ்வதி நகர், வள்ளியம்மபுரம், வள்ளியம்மாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெருமாள் தாங்கள் புதூர் போன்ற இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்திருக்கின்றார்.