Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்…. டுவிட்டரில் டிரெண்டாகும் #HBDTNCM ஹேஷ்டேக்….!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று பிரதமர், முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் தங்களின் ஒத்துழைப்போடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதம் விதமாக #HBDTNCM ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தனது வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கேக்கை வெட்டினார் . இந்த கேக்கானது, உதயசூரியனுக்கு மேலே கருப்பு, சிவப்பு மேடையில் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் அமர்ந்திருப்பது போன்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

 

Categories

Tech |