ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடதுகரை மற்றும் வலதுகரை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு 83 ஆயிரத்து 944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்படுவதால் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Categories