Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை ( இன்று ) முதல் அடுத்த 7 நாட்களுக்கு அரியலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி அரியலூர் மாவட்டத்தில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 459 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதனால் அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |