நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.
இந்நிலையில் ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றின் விலையை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த முறை ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 1500 ரூபாய் வரை உயரக்கூடும் எனவும் இந்த விலை உயர்வு ஒவ்வொரு வாகனத்தில் மாடலை பொறுத்து அமையும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.