பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50- க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.40.54- க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அதாவது ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு அந்நாட்டு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் இந்திய பிரதமர் மோடி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடுவாரா என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.