சென்னையை குப்பை இல்லாத நகரமாக மாற்றவும், தூய்மையாக பராமரிக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு அடைவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
எனவே சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும், சாக்கடை மற்றும் திரவக் கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.