தமிழகத்தில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 96 ரூபாய் குறைக்கப்பட்டு இன்று முதல் ரூ.2,045- க்கு விற்பனை செய்யப்படுகிறது .பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது வழக்கம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு என்னை நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றது.அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு 2141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 96 ரூபாய் குறைந்து 2045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.