Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 2வரை – கோவையில் அதிரடி …!!

கடந்த சில வாரங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை மேற்கொண்டு, தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வணிகர்களும் வியாபாரிகளும் ஆலோசனை நடத்தி கடைகளை அடைக்க முடிவெடுத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

அந்த வகையில் தற்போது செல்போன் கடை சங்கமும் ஒரு முடிவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மொபைல் மற்றும் பழுது நீக்கும் சங்கம் கோவையில் 5 நாட்கள் ( ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை)  கடைகளை அடைபதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக காந்திநகரில் தொற்று வேகமாக பரவுவதால் மாநகராட்சி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |