தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தர்ப்பணம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், மாசாணி அம்மன் கோவில்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.