தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.