தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் சந்தை இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதால் தாம்பரம் சந்தை மூடப்பட்டுள்ளது என்றும், மக்கள் கொரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.