தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்க்கை பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பமானது இன்று முதல் 13 ஆம் தேதி வரை www.tngasaedu.in , www.tngasaedu.org. போன்ற இணையதளங்களின் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளை வரிசைப்படி தேர்வு செய்து விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் மாணவர்களின் நலனைக் கருதி உதவி மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.