Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. எஸ்பிஐ அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் புத்தகத்தை தவிர்த்து வேறு வாங்கினால் 40 கட்டணம் மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |