தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை மே 31 வரை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து மேலும் ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் ஒருசில மாவட்டங்களில், குறிப்பாக கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. எனவே இன்று முதல் கோவையில் முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கோவையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளதாகவும், தன்னார்வலர்கள் உதவியோடு கூடுதல் படுக்கைகளை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.