இன்று முதல் பெங்களூரு – பாங்காங் விமான சேவையானது மீண்டும் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அந்தவகையில் பெங்களூருவிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு நேரடி விமானமானது வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து விமான சேவையானது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடங்க உள்ளது.
அதன்படி இன்று (ஏப்ரல் 1) முதல் புதன், வெள்ளி ,சனி ,ஞாயிறு ஆகிய நாட்களில் விமான சேவையானது பெங்களூரிலிருந்து பாங்காங்கிற்கு தொடங்கப்பட உள்ளது. மேலும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பாங்காங்கில் இருந்து பெங்களூருக்கு விமானமானது இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.