கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கேரளாவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.