தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரையில் கொரோனா சடலங்களை எரிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை தத்தனேரி, மூலக்கரை மின் மயானங்களில் கொரோனா சடலங்களை எரிக்க இன்று முதல் ஜூலை 3ஆம் தேதி வரை கட்டணம் இல்லை. சடலங்களை எரிப்பதற்கு கட்டணம் கேட்டால் 842 842 5000 என்ற எண்ணில் புகார் தரலாம் என்று அறிவித்துள்ளது.“