Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இலவச உணவு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னையில் வசிக்கும் 5.3:லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 26 லட்சம் ஏழை மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி இரவு வரை மூன்று வேளை உணவு சமைத்து வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |