மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அதன்படி இன்று முதல் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு 5ஆம் தேதி(இன்று) 7,245 பேருக்கும் 7 ஆம் தேதி 5,817 பேருக்கும் ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.