புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு இன்று (ஏப்ரல் 1)-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாகவும், மருத்துவ பணியாளர்களுக்கு 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories