Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து கன்னியாகுமரி சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இவற்றை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் இன்று முதல் இ- பாஸ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |