தமிழகத்தில் இன்று முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை தொடங்குகிறார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. எங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விடியலை நோக்கி கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து , இன்று முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது அனைத்து தரப்பு மக்களையும் தான் சந்திக்க உள்ளதாகவும், அவர்கள் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தன்னிடம் வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.