நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு இன்று வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்ததால் இன்று முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை வரும் ஜூலை-1 முதல் திறக்க உத்தரவிட்டுள்ளார்.