சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் திருவெற்றியூர் குடியாத்தம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.