தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
அதில் 50 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வெளிமாநிலங்களுக்கு பேருந்து இயக்கம், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி ஆகியவை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஐடி நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவித்துள்ளது.