Categories
சற்றுமுன் தூத்துக்குடி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒருவாரத்திற்கு கடைகள் அடைப்பு ….!!

தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் இன்று முதல் ஒரு வார்த்திற்கு கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் அடைக்கப் படும் என்று வியாபாரி சங்கங்கள் அறிவித்துள்ளன. இரு இடங்களிலும் மருந்து, பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |