Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் சில முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இன்று முதல் 5 நாட்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதனால் ஒரு வாரத்திற்குள் ரயில் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் இரவு 11.30 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |