ஒவ்வொரு புதன்கிழமையும் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும். புதன்கிழமை காலை 10 மணி – மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் இடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று அதன் மூலமாக பொதுமக்களுடைய குறைகளை உடனே கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.