Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… கல்லூரிகள் திறப்பு… கவனிக்க வேண்டிய விதிமுறைகள்..!!

தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது உயர்கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் இணையதளம் வழியிலும், தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களைக் படித்து வந்தனர். இருப்பினும் பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில சிரமங்கள் இருந்து வந்தது.

இதன் காரணமாக கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து டிசம்பர் 2ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதால் கல்லூரிகளின் திறப்புகள் தள்ளி வைக்கப்படுமா என்ற அச்சம் மாணவர்களிடையே இருந்து வந்தது. ஆனால் திட்டப்படி இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டது.

கல்லூரிகளில் மாணவர்கள் தங்கும் விடுதிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதோடு மாணவர்களுக்கு சில நடைமுறைகளையும் அரசு தெரிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு பின்பு கல்லூரிகள் திறக்கப்படுவதால் முக கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிய சமூக இடைவெளியை பின்பற்றி, கல்லூரி வளாகத்தில் செயல்படவும், ஆசிரியர்களுடன் உரையாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கும் பல்வேறு வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தை எப்போதும் சுத்தமாகவும், கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது.

Categories

Tech |