Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கோவையில் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோவையில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காந்திபுரம் 5,6,7 வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்பி இட்டேரி சாலை, எல்லை தோட்டம் சந்திப்பு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |