தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கோவை-நாகர்கோவில், மேட்டுப்பாளையம்- சென்னை இடையேயான சிறப்பு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை-திருவனந்தபுரம், சென்னை- ஆலப்புழா, சென்னை- மேட்டுப்பாளையம், நாகர்கோவில்- கோவை தினசரி சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும். திருவனந்தபுரம்- சென்னை, ஆலப்புழா- சென்னை, கோவை-நாகர்கோவில் தினசரி சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும்.