உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கு சுகாதார காப்பீட்டின் கீழ் கவரேஜ் இருந்து வருகிறது. ஆனால் அண்மை வருடங்களாக மன நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் மனநலன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. பெரும்பாலான சுகாதார காப்பீடு பாலிஸிகளில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுவதில்லை இந்த சூழலில் இன்று முதல் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுகாதார காப்பீட்டு பரிசுகளில் கவரேஜ் வழங்க வேண்டும் என இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பழைய சுகாதார காப்பீட்டு பாலிசிகள் மற்றும் புதிய பாலிசிகளில் மனநலன் சார்ந்த நோய்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜ் வழங்க வேண்டும் இதற்கான உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI பிறப்புத்திருக்கிறது.
மேலும் இதற்கு மனநல வியாதிகளுக்காக சுகாதார காப்பீட்டு பரிசுகளில் கவரேஜ் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இது போன்ற வியாதிகளுக்கும் கவரேஜ் வழங்கப்படுவதால் பாலிசிதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சுகாதார காப்பீட்டு பரிசுகளில் மன வியாதிகளுக்கு வழங்கப்படும் கவரேஜ்ஜால் நோய் கண்டறிதல் மருந்துகள், சிகிச்சை, அறை வாடகை, ஆம்புலன்ஸ் கட்டணம் போன்றவை அடங்கும் இருப்பினும் மனநல ஆலோசனை தியானம் போன்ற சேவைகளுக்கு கவரேஜ் கிடையாது.