4 வருடங்களுக்கு பின் சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று துவங்குகிறது. வரும் 26ஆம் தேதி வரை 4 நாட்கள் இப்போட்டி நடைபெற இருக்கிறது. இவற்றில் 3 அமெச்சூர் வீரர்கள் உட்பட மொத்தம் 123 பேர் பங்கேற்கின்றனர். இதற்கிடையில் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்துகொள்கிறார்கள்.
அத்துடன் கரண்தீப் கோச்சார், அமன்ராஜ் உள்ளிட்ட தொழில்ரீதியான வீரர்கள் 123 பேர் கலந்துகொள்கிறார்கள். இப்போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூபாய்.4 லட்சமாகும். கிண்டியிலுள்ள கோல்ப் மைானத்தில் போட்டியானது நடக்கிறது.