Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சென்னை – பெங்களூர் ஆகாசா விமான சேவை…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஆகாசா ஏர் விமான நிறுவனம் இன்று  முதல் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து இந்த விமான நிறுவனம் தன் சேவையை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சென்னையில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு நாளை முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

அதன்படி பெங்களூருவில் காலை 8:30 மணிக்கு புறப்படும் விமானம் சென்னையில் காலை 9:35 மணிக்கு தரையிறங்கும். அதனைப் போலவே சென்னையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு 11.20 மணிக்கு சென்றடையும். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு 1.5 மணிக்கு சென்னை வந்து சேரும். பின்னர் மதியம் 1:40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 2.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும் எனவும் இந்த விமானம் தினமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |