சாய் நகர் ஷீரடி -சென்னை சென்ட்ரல் இடையே ஆன வாராந்திர ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இனி வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும் இரயில் (22601) இன்று காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய் நகர் ஷிரடி சென்றடையும். அதனைப்போலவே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயில் (22602)வருகின்ற 15ஆம் தேதி காலை 8.25 மணிக்கு சாய் நகர் சீரடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அகமது நகர், தவுட், சோலாப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி,அரக்கோணம் மட்டும் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அதிரடியாக தெரிவித்துள்ளது.
Categories