தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மண்டபத்துக்கு இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் இன்று முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும். கோவை -ராமேஸ்வரம் ரயில் ஜூலை 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும். ராமேஸ்வரம் -திருப்பதி ரயில் இன்று முதல் செப்டம்பர் 12 வரை இராமநாதபுரத்து நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.